நில மகளின் நாணம்
மழையே மாதங்கள் சில கடந்து
என்னில் நீ கலந்திடும் வேலையில்
உன் முத்தத்தை நீ சத்தம் இல்லாமல்
கொடுக்க மாட்டாயா?
உன்னை ஸ்பரிசித்த நாணத்தில்
நானிருக்க...
நம் காதலை ஊரெல்லாம் பரப்பி விடுகிறது
மண் வாசனை....
இனி நானும் என்ன தான் செய்வேன்..
நாம் ஊடல் கொண்ட அந்த காட்சியை மின்னலும்
படம் பிடித்து விட்டதே....!