பேசும் உணர்வுகளும் பேசாத இதழ்களும்

விழிகள் நான்கும் பார்த்து கொண்டு
மௌனமாக
கண்ணீர் வடிக்கிறது....
உணர்வுகள் கூட
என்னை கேலி செய்கிறது
உன்னிடம் நான் சமாதானமாய்
பேச வரும் தருணங்களில்....
நம் இதழ்கள் இரண்டும் பிரிவின் வலிகளை
பகிர்ந்து கொள்கின்றன..
விழிகளுக்கு, மனதிற்கும்
இடையே ஓர் அன்பு யுத்தமே
நடக்கிறது
உன் முகம் பார்க்காமல் என் தலையை
திருப்பி கொள்ளும் நொடிகளில்...
இணைந்திடாத கைகளுக்கும் இடையில் இணைந்திட
ஆசை படுகிறது விரல்கள்...
பேசிக்கொள்ள ஆசைகள் ஆயிரம் இருந்தால்
கூட நம்மை விலக்கி வைக்கிறது வரட்டு
பிடிவாதம்..

எழுதியவர் : லீலா லோகிசௌமி (8-Jun-18, 9:46 am)
பார்வை : 599

மேலே