தித்திக்கும் திருநெல்வேலி

திருநெல்வேலி
உச்சரிக்கும் போதே நினைவில் நிற்பவை
தரணி போற்றும் தாமிரபரணி
நாவில் நழுவி செல்லும் அல்வா
சந்தன மரமும் காந்தள் மலரும் நிறைந்த பொதிகை மலை
தமிழ்நாடு முத்திரையில் அலங்கரிக்கும்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
பட பட சிவகாசி பட்டாசு
குளு குளு குற்றாலம்
சாரல் மழை
தண்ணீர் பெருக்கெடுக்கும் பாணதீர்த்தம்
மணிமுத்தாறு பாபநாசம் குண்டாறு
கடனாநதி தலையணை .......
திரும்பும் திசையெல்லாம்
பச்சை பசேல் வயல் வெளிகள்
ஓங்கி உயர்ந்த பனை மரங்கள்

வீரம் நிறைந்த மக்கள்
உறவுகள் சேர்ந்து வாழும் பண்பு
உறவில்லையென்றாலும் உறவுப் பெயர் சொல்லிப் பேசும் குணம்
ஏலே வாலே போலே
என பாசமாய் அழைக்கும் அக்கம் பக்கத்தினர்
பெற்றோர் மட்டும் அல்லாது மற்றவர்களும்
பிள்ளைகளைக் கண்காணிக்கும் மாண்பு

வேறு எங்கு பார்த்தாலும்
என்னலே இங்க என்ன செய்யுத
என கேள்வி கேட்கும் உரிமை

எப்போதும் நாம் கவனிக்கப்படுகிறோம்
என்னும் உணர்வு பிள்ளைகளுக்கு

வீரம் செறிந்த ஆண் பிள்ளைகள்
திமிரான தோற்றம் கொண்ட பெண் பிள்ளைகள்
பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் ...

தெருக்களில் கூடி விளையாடும் சிறுவர்கள்
கல்வியிலும் அறிவிலும் கூட சளைத்தவர்களில்லை ..
வாசலில் உட்கார்ந்து ஊர்வம்பு இழுக்கும் பெரியவர்கள்

தித்திக்கும் திருநெல்வேலி..

எழுதியவர் : கீர்த்தி (9-Jun-18, 1:44 pm)
பார்வை : 231

மேலே