கூவல் பாட்டு
உன் கூவல் கேட்க காத்திருக்கிறான்
குயிலே ஏன் நீ கூவவில்லை....
அதிகாலை உறக்கத்தில்
உன் கூவல் எனக்கு அணைக்கமுடியா அலாரம்...
ஐந்து நிமிடம் என்று சொல்லிவிட்டு
உறங்கிய நாட்கள் உண்டு......
உழைக்கும் போது களைப்பு நீக்கும்
உன் கூவல் எனக்கு தெம்மாங்குப்பாட்டு.....
உடன் சேர்ந்துக்கொண்டு பாடும் ஆசை எப்போதும்...
சோர்வின்போது
உன் கூவல் எனக்கு உற்சாகம்..
கேட்டப்பின்பு மனதில் எங்கும் களியாட்டம்..
இரவில் படுக்கையுடன்
உன் கூவல் எனக்கு தாலாட்டு...
தாய்மடி மீது தூங்கும் ஓர் சுகம்..
கரையும் காகமும் குனுகும் புறாவும் உன் இசை தோழர்கள்..
உன் கூவல் பாட்டின் பின்னணி இசை இவர்கள்...
பின்னணி இசை கரவ்கீபோல் எங்கும் உண்டு...
உன் கூவல் பாட்டு கேட்கவில்லை இப்போது...
குயிலே ஏன் நீ கூவவில்லை..
உன் கூவல் கேட்க காத்திருக்கிறான்.....