எங்கிருந்தோ ஓசைகள்
எங்கிருந்தோ வரும் ஓசைகள்
எண்ணத்தின் அலை ஓசைகள்
பொங்கி எழுந்து கரையைத்
தழுவி கொட்டிடுதே கவிதை வரிகளை
மார்கழி மாத குளிரினிலே வீட்டில்
முடங்கி அதிகாலையில் இன்னும்
தூங்கிடலாம் என்று முயற்சித்தபோது
முற்றத்து சாளரத்திலிருந்து மெல்ல
காதில் வந்து விழுந்ததோரோசை
மெல்ல எழுந்துவந்து பார்க்கையிலே
பக்கத்து தோட்டத்து மாமரத்தில்
மரங்கொத்தி ஒன்று கொத்தி கொத்தி
ஒரு மேளத்தின் இசை தந்து கொண்டிருந்தது,
அது கொத்துவதோ தன குஞ்சுக்கு
இரைதேடி மரத்தில் ஒட்டி இருக்கும்
புழு பூச்சிக்கு............................
வாசலுக்கு வந்து நின்று பார்த்தபோது
என் காதில் வந்து மனதை நிறைத்தது
பெருமாள் கோவில் மணியோசை.....
ஊர்ந்து கேட்டேன்,காதில் இப்போது
இசைத்தது கோவிலில் சிறுவர் குழாம்
பக்தியுடன் பாடும் திருப்பாவை
மற்றும் திருவெம்பாவை........கேட்க கேட்க
பரவசமானேன்........................
,வெட்கப்பட்டேன் இன்னும் எனக்கென்ன
தூக்கம்........இப்போது முழு விழிப்பில் நான்
பல் துலக்கி விரைந்தேன் பூஜை அறைக்கு
வணங்கிவிட்டு வெளியில் வந்தேன் ,இப்போது
என் காதை நிறைத்தது வண்டுகளின் ஹ்ரீம்
என்னும் ரீங்காரம் , என் தோட்டத்து மலர்களை
சுற்றி சுற்றி கரு வண்டுகள் கூட்டம்........
தேன் தேடி அலைய கீதமொடு,
அதைத்தொடர்ந்து சோலைக்குயிலின்
இளங்காலை மங்கள கீதமது
பூபாளமாய் நிரப்பியது காதை..............
இன்னும் தொடர்ந்து வீட்டு சுவரின் மீது
நின்று கூவும் சேவலின் கூவல்,மாமரத்து
காகங்களின் 'கா,கா' கரகோஷம்
அப்பப்பா , என்னென்று சொல்வேன் .எத்தனை
அழகு இந்த அதிகாலை வேளை.........
எத்தனை குளுமை இந்த மார்கழி மாதம்
எத்தனை அழகு இவை அத்தனையும்
தந்திடும் இயற்கை ............