தோழி

அனுமதி இன்றி முழுமதி ஒன்று அலைகள் உரசி சென்றிடும்...

வெளிச்சம் இல்லா நீல கடலோ பளிச்சென மின்னிடும்...

நிலவாய் என் வாழ்வில் வந்தாய்;
நீ ஏன் என்று கேட்காது வெளிச்சம் தந்து சென்றாய்.

வழி இன்றி தவித்திடும் தனி ஒரு தோணியின் களங்கறை விளக்கம் நீ.

விடை இன்றி தோன்றிய பற்பல கேள்விகளின் கலக்கமில்லா விளக்கம் நீ.

என் கனா எடுத்து அதை உன்னுள் விதைத்து வென்றிட கற்று தந்தாய்;

பன் முகம் தெரிந்தும் எங்கும் கான ஓர் தனி முகம் ஆகி நின்றாய்..


பார்த்த விழிகள் மரப்பினும்; பார்த்த முகங்கள் மரப்பினும;
பலகிய இதையங்கள் மறப்பதில்லை...

வீசிய காற்றின் திசை மாறேனும்; காற்றும் வீச மறப்பதில்லை...

எழுதியவர் : சந்துரு (9-Jun-18, 4:21 pm)
சேர்த்தது : Chandru
Tanglish : thozhi
பார்வை : 502

புதிய படைப்புகள்

மேலே