அவள் அவளாக
பேச்சின் மூலம் உறவை வளர்த்தாள்...
அழகினால் வசீகரம் கொண்டாள்...
பாசம்கொண்டு உறவின் பாலம் அமைத்தாள்...
பண்பைக்கொண்டு சண்டை தவிர்த்தாள்...
காதலாகி காவியம் படைத்தாள்...
கண்ணசைவினால் நம்பிக்கை விதைத்தாள்...
உண்மை பேசி நேர்மை காத்தாள்...
தைரியங்கொண்டு தோல்வியை எதிர்த்தாள்...
இசைந்துகொடாமல் வீரம் வளர்த்தாள்...