எல்லாம் அவளால்
சுயநலம் எல்லாம் வேண்டாம் என்றாள்...
நேர்வழி ஒன்றே போதும் என்றாள்...
உழைப்பை நம்பி முன்னேறு என்றாள்...
அவசரம் வேண்டாம் பொறுமை என்றாள்...
போட்டி உண்டு தளராதே என்றாள்...
இலக்கை அடைய உன்னை நம்பு என்றாள்...
சாத்தியம் இருக்கு வெற்றி வரும் என்றாள்...
சத்தியம் கொண்டு வாழணும் என்றாள்...
தடைகள் எல்லாம் தகரும் என்றாள்...
முன்னேற்றத்திற்கு மட்டும் முன்னுரிமை என்றாள்...
மனிதமே சிறந்த பொக்கிஷம் என்றாள்...
நேர்மை தரித்தலே புகழ்ச்சி என்றாள்...