பருவ மழை
கோடைகால மழை-
இன்னும் இரண்டு நாளில்
வந்துவிடும் என்று
வானிலை ஆராய்ச்சி மெய்யம் அறிவிப்பு
நம்பிக்கையில் காத்திருந்தனர்
மண்ணை நம்பி வாழும் விவசாயிகள்
வறட்சியில் குடிநீருக்காக மக்கள்
கோடை வெய்யலின் கொடுமைகொஞ்சம்
தணியும் என்று எல்லோரின் எதிர்பார்ப்பு
வானமும் இருண்டது மப்பும் மந்தாரமுமாய்
ஒன்றிரண்டு தூறல் அங்கும் இங்குமாக
மழை .......இரவில் தவளைகள் கூட்டு
'முகர்சிங் 'இசை ,ரிம்....ரிம்..என்று
ஓயாமல் ,தெருஓரநீர் தேக்கிலிருந்து
அக்கம்பக்க குளம் குட்டைகளிலிருந்து
இரவில் நிசப்தமாய் ஊர்ந்து செல்லும்
பாம்புகளுக்கு கொண்டாட்டம்,',நுணலும்
வாயால் கெட்டது' ......தவளைகள் 'பீஸ்ட்
இப்போது தவளைகள் கூட்டத்தின் இசை
வலுவிழந்தது சற்றே.....ஈனஸ்வரம்...
நாட்கள் ஓடின.......ஆராய்ச்சி மெய்யம்
இன்னும் நம்பிக்கையில் .......அறிவிப்புகள்
முழுவீச்சில் மழையைக்காணோம்...
பக்கத்துக்கு மாகாணத்திற்கு சென்றுவிட்டதோ
மக்கள் தவிப்பிலும் நகைச்சுவை குத்தல் ......
பருவகால மழை தவறிவிட்டது........
இப்போது மீண்டும் அறிக்கை.....
எங்கும் வறட்சி....தண்ணீர் தேடி மக்கள்
இப்படியே நாட்கள் செல்ல ..........
திடீரன்று ஒரு நாள் வானம் இருண்டது
இல்லை இது என்ன இப்படியோர் இருள்
பகலில் என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே
மேகங்கள் சமுத்திரமாய் மாறி மண்ணில்
இறங்கியது அகால பெருமழை
எங்கும் வெள்ளம், தெருவெல்லாம் ,
வீடுகளெல்லாம் .............. மீண்டும்
தவளைகள் கூப்பாடு...இப்போது திக்கு
தெரியா தவிக்கும் மக்களின் கூப்பாடும்
சேர்ந்து சோக கீதம், மரண ஒலி.....
அதிவ்ரிஷ்டி ,அநாவ்ருஷ்டி .....என்பர்
அப்படியொரு மழை ...............
மழையின் பாதிப்பு.........யாரை சொல்ல
அகால மழையைதிட்டுவதா, இல்லை
'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை'
என்ற குரலுக்கு ஒப்ப, செயலிழந்த
ஆட்சியரை குறை கூறுவதா.......................
அடுத்து இவ்வாறு நேராது ,இவர்கள்
கூறும் சமாதானம் .......யாருக்கு தேவை ..
மழை நின்றது ....வெள்ளமும் இறங்கியது
படிப்படியாய்........மீண்டும் இயங்கத்தொடங்கிய
வாழ்க்கை..........................
இதோ மீண்டும் பருவகாலம் வந்துவிட்டது
தவளைகள் கோஷ்டிகணம் காதில் ஒலிக்குது
'கன மழை தமிழ்நாடு பரவலாக,மீனவர்
கடலோரப்பகுதியிலிருந்து கடலுக்கு
மீன் பிடிக்க செல்ல வேண்டாம்..புயல்
அபாயம்...............
மழையின் போக்கு எப்படியோ யாரறிவார்
இயற்கையின் போக்கை.......
வெள்ளம் வந்தால் சமாளிக்க நாம்
இப்போது தயாரா...............??????