நடக்கப் பழகு

நகரம் முதல் நாள்
முன்னாடி யாரடா
கையில் குடுவாயோடு
தண்ணீர் குடுவை தான் -அமிலம் அல்ல
பின்னாடி யாரடா கண்களில்
வன்மத்தோடு
அவன் பார்வையே அப்படித்தான்
பக்கவாட்டில் எவனோ உரசும் படி நடக்க
நொடிகளில் போய்வந்த உயிர்
கழுத்திலென்ன துணி
பொன்நகையை மறைக்கவே-
புன்னகை எங்கே பறிபோனது
கண்களிலென்ன பயம்
காமவெறியர்கள் - ஜாக்கிரதை