ஆடையின் போக்கு

மிருகத்துடன் பிறந்தோம் மிருகமாய்
மிருகமென ஆடையேதுமின்றி,
திறந்த மேனியராய் திரிந்துவந்தோம்,
பேசத்தொடங்கினோம், சிந்தனையும்
கூடிற்று நாகரீகம் உதயமாய் வேகமாய்
வளர , ஆடை உடுத்திட ஆசை வந்தது
ஒரு பாலருக்கு நாணம் வந்தது வெட்கமமும் சேர்ந்து
மரவுரி தரித்து உடலை மறைக்க, காற்றில்
பறந்துவந்த பஞ்சு கண்டு பஞ்சாடை உருவானது
இப்படியே வளர்ந்தன மேலாடைகள் இருபாலருக்கும்
இதில் நான் இப்போது காண்பதோ ஒரு பின்தங்கள்
தலைகீழாகும் விஷயம்; முழுவதும் மறைக்கவந்த
ஆடைகள் இன்று மெல்ல மெல்ல குறைகிறது
சிலர் 'மாடல்' என்ற பெயரில் அரைநிர்வாணத்தில்
இதை 'நாகரரேகத்தின் குறியீடாக' நினைக்கின்றனர்
வெட்கம் போனதோ''''''''''''' வேதாளம் முருங்கைமீது
மீண்டும் எறியதோ ...............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jun-18, 7:31 am)
Tanglish : aadaiyin poku
பார்வை : 68

மேலே