திருக்குறள்
தமிழ் மொழி தந்தான் நமக்கு
தனித்தமிழ் குடமுனி அகத்தியன்
குறுகிய ஈரடி குறட்பாவில்
மறைகளின் சாரம் நமக்களித்தான்
திருக்குறளை வள்ளுவ மாமுனி
அதில் அவனியில் நம் வாழ்க்கைக்கு
இல்லாதது ஏதுமிலை,முப்பாலை
ஓதுமதில்,இதை கசடற கற்போமாயின்
இம்மைக்கும் மறுமைக்கும் இதுவே நமக்கு.