காதலித்தோம் நானும் அவளும்

உறக்கம்
இல்லாமல்
உள்ளத்தோடு
பேசினோம்......
ஒரு
நிமிடம் கூட
காதலுக்கு
விடுமுறை
கொடுக்காமல்
காதலித்தோம்.......
சுட்டெரிக்கும்
வெயிலில்
நிழலுக்கு நிழலாய்
நடந்து
சென்றோம்......
வீசும்
காற்றையே
வெக்கப்பட
வைத்தோம்
அலைபேசி
முத்தத்தில்.......
சாலையோரம்
நீயும்
நானும் கைக்கோர்த்து
நடக்கும்
நேரம்.........
நீண்டது
பாதைகளின்
தூரம்........
உன்னுடன்
என்றும்
வேண்டும் எனக்கு
சாகா வரம்...........
என்றும்
கேட்க வேண்டும்
என்
அலைபேசியில்
அலாரமாக
உன்
அலைவரிசை..............