காதலின் அடையாளமாக
இந்த உலகில்
பிறந்துவிட்டோமென்று துன்பம்படும்
ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும்
இருவர்தான் காரணம்-- அதிலும்
அவர்களின் உ(டலு)றவுதான் காரணம்...
அதுபோல் இருவரின்
உ(டலு)றவில் இந்த உலகத்தில் உதித்த
என் கதையை
இங்கு எடுத்துரைக்கிறேன்.....
அவனும் அவளும்
சில நாட்கள் சந்தித்தார்கள்
பல நாட்கள் சிந்தித்தார்கள்
உறவும் என்னவென்று தெரியவில்லை
உலகும் என்னவென்று தெரியவில்லை....
அவனின் மயக்கம் இவளின்
பெண்மையில் இருந்தது
அவளின் மயக்கம் இவனின்
ஆண்மையில் இருந்தது - உறவு
தெரியாத ஒன்றில்
இப்படி ஒரு உணர்வு உருவானது!!
ஆடும் மனித உடலில்
உணர்ச்சி நரம்பில்
உணர்வு பெருக்கெடுத்து ஓடினால்
உதிக்கும் சூரியனும் தெரியாது
உடலில் பசியும் எடுக்காதென்று
ஏதேதோ சொல்லிக் கொண்டு
கூடலுக்கு தயாரானார்கள்.....
காதல் என்று பெயர் வைத்து
கைகளை தொட்டுக் கொண்டும்
கன்னங்களை கிள்ளிக்கொண்டும்
முத்தமிடும் இதழ்களால்
முழுவதும் சத்தமிட்டு கொண்டு
முகவரி தெரியாத அடர்ந்த இடத்தில்
காதல் என்று
சொல்லி கொண்டு "காமன் அவன்"
உருவெடுக்க அங்கே அரங்கேற்றமானது
அவர்களின் கூடல்.....
எதுவும் சில காலம்தான்
என்ற தத்துவம் தெரியாத அவர்கள்
இச்சையும் சில நேரம்தான்
இதில்
காமமும் சில நேரம்தான் என
தெரியாமலே காலத்தினை கழித்தார்கள்!!
கடமை முடிந்ததென்று
இருவரும் பிரிந்தார்களா????
இல்லை
கலவி முடிந்ததென்று
ஒருவர் மட்டும் பிரிந்தாரா???
என்று தெரியவில்லை --- ஆனால்
தெரியும்
நான் கருவாக உருவாக
அவர்கள் இருவர்கள் மட்டும்தான்
காரணம் என்று...!!!
கலவியின் போது
காலத்தை கழித்தவர்கள் "நான்"
கருத்தரித்த போது என்னை
கலைக்க மறந்துவிட்டார்களோ
என்னவோ????!!
அதனாலே எப்போதும் நான்
கவலையில் கிடக்கிறேன்.....
தன்னுடன் பழகிய பெண்ணை
புதர்களுக்கு மத்தியில்
அழைத்து செல்லத்தான் அவனுக்கு
பகுத்தறிவு படைக்கப்பட்டதா????
இல்லை
கண்கள் ஆசை கொண்ட அவனுக்கு
இவள் கொடுக்கத்தான்
கற்பு படைக்கப்பட்டதா?????
ஒருவரை மட்டும் குறிபிட்டு
குறைசொல்ல எனக்கு மனமில்லை
எனவே
என்னை பொருத்தவரை இருவருமே
இழிவுதான்
இந்த சமுகத்திற்கு......
இல்லையென்றால் இங்கு நான்
இப்படி கிடப்பேனா??????
தாயை தெய்வமாக பார்க்கும்
இந்த நாட்டில்
என்னை பெற்றவளை
எப்படி நான் தெய்வமாக பார்ப்பேன்???...
தந்தையை தலைவனாக பார்க்கும்
இதே நாட்டில்
என் தாயுடன் படுத்தவனை
எப்படி நான் தலைவனாக பார்ப்பேன்???...
பெயர் வைக்க
பெற்றோர் இல்லாத எனக்கு
இந்த சமூகம்
எத்தனை பெயர்களை வைக்குமோ??
தூக்குவதற்கு ஆளின்றி
துள்ளி அழும் என்னை
இந்த சமூகம் எத்தனை தூரம் வீசுமோ??
காரணம் தெரியாமல்
அவர்கள் கொண்ட கலவிக்கு
இன்று நான்
கண்ணீர் வடிக்கிறேன்...
"காமத்தின் பசிக்கு"
காதல் என்று அவர்கள்
பெயர் சூட்டி அழைத்தார்கள் -- அந்த
"காதலின் அடையாளமாக"
தூக்குவறக்கு ஆட்கள் இன்றி
கழிவறையில் நான்
கண்ணீர்வடித்து கொண்டிருக்கிறேன்...!!!
(எழுத்து இணையதள உறவுகளுக்கு ஓரு வேண்டுகோள். மேற்கண்ட படைப்பினை வாசகர்கள் யாரும் காமமாக பார்க்க வேண்டாம். காமமாக நினைத்து படிக்க வேண்டாம். வளர்ந்து வருமா இந்த நவின காலத்தில் சமுதாயத்தில் இதுப்போன்ற நிகழ்வுகள் நாள்தோறும் தொடர்ந்து கொண்டே வருகின்றது. இதில் எதுவும் தவறாக சித்தரிக்கப்படவில்லை. மீறி ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்)