உலாவருதல்

#கிறுக்கல்16

#தமிழினியன்

#உலாவருதல்

வானை வளைத்த

வெண்நெற்றியில்

நிலவின் ஒளிபோலே

மிளிரும் வட்டநிலவின் பிரமிப்பில்,

என் உயிரையும் உள்ளத்தையும்

உன் இதயம் எனும்

ஒளியில்லா கள்ளச்

சிறையினில் குடிவைத்தாயே,

மின்மினி மின்னும் மேனியழகைக்

கொண்டு,

என் இதயத்துக்கு குளிரின்

நடுக்கத்தை தந்தவளே,

தூமகேதுவின் இடையே

வெண்வட்டப் பட்டு போன்ற

விழியால் வேல் எறிபவளே,

விரல்வருட ஏங்கும்

மேகலையையே இடையாக

மடித்து இடையை கொண்டவளே,

நீ தேர்போல வீதியில் உலாவர,

ஒளிவீசும் சூரியனும் இருளைத்

தேடியோட,

அழகு பதுமையை விரல்கோர்த்து கட்டியனைக்க கனாவோடு,

அக்கினியை சுற்றி அறத்தோடு

நானும் உலாவருகிறேன்.

எழுதியவர் : தமிழினியன் (15-Jun-18, 11:38 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 49

மேலே