அன்பின் சாரம்

உன் விரல் கோர்த்து,தோள் சாய்ந்தபடியே வெகு தூரம் செல்லவே விழைகின்றேன்...அன்பிற்கு திசைகள் இல்லை....மொழிகள் இல்லை...

இதழின் மௌனம் கூடும் உணர்த்தும்...அதுவே அன்பின் மொழி...

என் வரிகள் அனைத்தும் உன் நினைவுகளின் கூடுகைகள் என நீ அறியும் தருணம் உன் விழிகள் நிகழ்த்தும் வர்ணஜாலம் உணர்ந்து பார்க்க ஆசை...

ஒரு குழந்தையை போலவே குதூகலிக்கின்றேன் உன் விழிகள் நோக்கும் ஒவ்வொரு தருணமும்...

எனக்கான உறவு என உன்னை அறியும் தருணம் அழகு...அவ்வழகுடனே பயணப்பட விரும்புகின்றேன் என் இறுதி வரையும்....

எழுதியவர் : ராஜிபிரேமா💕 (16-Jun-18, 11:10 am)
Tanglish : anbin saaram
பார்வை : 563

மேலே