காதலால் உருகினேன்

கலையிழந்த முகம் கண்களில் மட்டும் காதலை காட்டுகிறது...

சுரத்தில்லா வார்த்தைகள் உன் பேச்சு பேசுகையில் வீரியமடைகிறது...

வலி பொறுக்கும் இதயம் உன் நினைவுகளால் தன் துடிப்பை சீர் செய்கிறது...

நடக்க தடுமாறும் கால்கள் உன்னை பார்க்க ஓடோடி வருகிறது...

என்கூட மரணம் நம்மை பிரிக்கும்வரை இருந்துவிடு...

எழுதியவர் : ஜான் (16-Jun-18, 11:05 am)
Tanglish : kaathalaal urukinen
பார்வை : 111

மேலே