காதல் நோய்
அன்று என் வாழ்வில் புகையிலை...
இன்று என் வாழ்வில் புகையி(ல்)லை...
காரணம் உண்டு சொல்ல ஒன்று...
பெண்ணே
உன்னை கண்ட பிறகுதான் என்று.....
அதை பிடித்திருந்தால் நுரையீரல்
புற்றுநோய்....
உனை பிடித்ததால் நிறைகாதல்
பற்றுநோய்.....
ஈரல் புற்றுநோயால் மண்ணில் என்றோ
இறப்பேன்.....
காதல் பற்றுநோயால் உன்னில் என்றும்
இருப்பேன்.....