உன் நெஞ்சுக்குழி
விழுந்ததும்
உடலெல்லாம்
காதல் காயங்கள்
பின் எழுந்து
பார்த்தேன் உன்
நெஞ்சுக்குழி
என்றதும் வெளியேற
விரும்பவே இல்லை!
எனக்குள்ளும்
காதல் பிறக்கிறது
மூங்கிலுக்குள் இசை
பிறப்பதுபோல்
உன்னை
சுவாசிப்பதால்!
எங்கு திரிந்தாலும்
என்ன செய்தாலும்
மாலை ஆனதும்
கூட்டை அடையும்
பறவை போல்
உன்னையே என்
மனம் அடைகிறது!
உன் நினைவுப்
படுக்கையில்
என்னைக்
கிடத்தியதும்
தேவதைகளின்
இருப்பிடத்திற்கு
என்னை அழைத்துச்
சென்று விடுகிறாய்!