நட்புக்கு விதையாகும் வாசகர் சந்திப்பு

சேலத்திலுள்ள பாலம் புத்தக விற்பனை நிலையம் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாலம் வாசகர் சந்திப்பை நடத்திவருகிறார் ப.சகஸ்ரநாமம். இதுவரை இடைநில்லாது நடத்தப்பட்டு வந்த இந்தச் சந்திப்பு, வரும் 17-ம் தேதி 250-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. “பாலம் வாசகர் சந்திப்புக்கு வருபவர்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாமல் வருபவர்கள் தங்களை ஒத்த கருத்துகளைக் கொண்டவர்களைச் சந்திக்கும்போது நண்பர்களாக மாறிவிடுகிறார்கள். சமூக வலைதளங்களால் தனிமனித சந்திப்புகள் குறைந்துவிட்ட வேளையில், தனிமனித சந்திப்புகளை மீட்டெடுக்கும் அமைப்பாகப் பாலம் இருக்கிறது. நூல்கள் வாசிப்புக்காக உருவாக்கப்பட்ட பாலம் வாசகர் சந்திப்பு, இன்றைய காலத்துக்குத் தேவையான உறவுப்பாலமாகவும் இருக்கிறது” என்கிறார் ப.சகஸ்ரநாமம். 250-வது வார பாலம் வாசகர் சந்திப்பில், பெருமாள் முருகன் கலந்துகொண்டு உவேசாவின் ‘என் சரித்திரம்’ நூலை அறிமுகப்படுத்திப் பேசவிருக்கிறார். பாலம் அமைப்பின் நற்பணி சிறக்கட்டும்!

- எஸ்.விஜயகுமார்

எழுதியவர் : (16-Jun-18, 10:06 pm)
பார்வை : 58

மேலே