காதல்
காமன் தொடுத்த பானங்கள்
என்னைத்தீண்ட காம வயப்பட்டேன்
உன்னைப்பார்த்தேன் கண் திறந்து
உன் பார்வையோ என்மீது விழியாதோ
என்று நினைக்கையில் நீ கண் திறந்து
என்னைப் பார்த்தாய் உந்தன் பார்வை
மலரம்பாய் என் இதயத்தை துளைக்க
அங்கு காமன் அம்புகள் தேக்கிய
காமம் காதலாய் மாறியது என்னவளே
உன்மீது காதல் கொண்டேன்