டிஜிட்டல் இந்தியா
![](https://eluthu.com/images/loading.gif)
அன்றிருந்த உலகம்தான்
இன்றும் இங்கே இருக்குது
மனிதன் போக்குதான்
கண்டபடி போகுது
சுயநலம் மட்டும்தான்
இன்னிக்கு வாழுது...
என்னை ஆளுது...!
மன்னராட்சி மக்களாட்சி ஆனது
ஆனாலும் அது
சர்வாதிகாரம் மிக்கது
போனதெல்லாம் போகட்டும் விட்டிடு
அடிமைகளால் என்ன பயன் கிடைக்கப் போகுது...
ஓட்டு மட்டும் போடத்தான்
மக்கள் தொகை வாழுது
அது அதிகார வர்க்கத்தை கேள்விகேட்கக்கூடாது
மீறி கூடினால் சுட்டு தள்ளிடு(ம்)
பணம் பதவியாசை ஆனது
அது குற்றத்தைக் கூட்டிக்கொண்டு போகுது
என்ன குற்றம் செய்தாலும்
சட்டத்தின் ஓட்டை வழியில்
பணக்கார முதலைகள்
தப்பித்து வந்திடுது
மனசாட்சியோடு வாழும் மக்களுக்கு
வாழத்தான் இடமில்லை
ஏழை விவசாயிக்கு
இந்நாட்டில் துளியுன் மதிப்பில்லை
என் நாட்டை ஆளுகின்ற
தலைவனுக்கும் முதுகெலும்பு இல்லை
ஏழைகளைக் கொன்றுவிட்டால்
நாடு வல்லரசாக மாறிடுமாம்
நினைக்கிறான் முட்டாள் பய...
இனி தொட்டுணர்ந்து வாழ முடியாதாம்
டிஜிட்டல் இந்தியாவிலே
தனித்தனியாக அமர்ந்துதானே
குடும்பம் நடத்தனுமாம்
4g நெட்வொர்கிலே...
இன்று இருப்பது யாரும் மனிதனில்லை
இங்கு வாழ்வது யாவும்
சிட்டி ரோபோக்கள் தானே!