கவிதைக்குத் தமிழ் வேண்டும்
கவிதைக்குத் தமிழ் வேண்டும்
புத்தகத்தில் தேடினேன்
கற்பனைக்கு நிலவு வேண்டும்
வானத்தில் தேடினேன்
அமர்ந்து எழுதிட மலர்ச் சோலை வேண்டும்
தோட்டத்தைத் தேடினேன்
அந்தியின் அழகுடன் புன்னகையில் நீ வந்தாய்
எல்லாம் என்னருகில் நிற்கக் கண்டேன் !