நெஞ்சம் கேட்கிறது என்ன எழுத

இதழ் விளிம்பில்
புன்னகை
இரு விழிகளில்
மின்னல்
கலைந்தாடும் கூந்தலில்
தென்றல்
தூரிகை எழுதியது
ஓவியம்
வார்த்தைகள் எழுதியது
கவிதை
நெஞ்சம் கேட்கிறது
என்ன எழுத ?
சொல் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-18, 6:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 306

மேலே