நானும் உனதானேன்
என்னவனே
உன்னை பார்க்க
கண்கள் ரெண்டும்
தந்தி அடிக்குதடா...
உன் விழி பார்த்து
நாணம் கொள்ள
மனசும் ஏங்குதடா...
கண்டவுடன் காதல் என்று
உன் கண்களை பார்த்து
சொல்லிட தோனுதடா...
நீ இல்லாத உலகம் எனக்கு
வேணாம்னு உன் தோளில்
சாய்ந்து சொல்லணும் போல
இருக்குதடா...
மங்கள நாண் நீயும் பூட்ட
தேதி ஒன்னு பார்த்து சொல்லடா...
உன் மனைவி ஆக தான்
நேரமும் வந்ததடா....
கைபேசியில் பேசாம
விழியாலே பேசுடா..
நூலளவு இடைவெளியில்
உன் விழியால் என் இமைகளை மூடடா..
என் நினைவுக்கு உரு கொடுத்தேன்
நீ வந்து நின்றாயடா...
கண்டதெல்லாம் கனவுனு
தூக்கம் கலைந்தேனடா....
கனவல்ல நான் உன் நிஜம் என்று
என் கரம் பற்றினாயாடா.....