யார் பிணம்
உயிரற்ற உடலுக்கு பிணமென்று பெயர்
பிணமாக்கி பணமாக்கும் இந்த பிணங்களுக்கு என்னபெயர்
பத்திரமாய் விளையாடு என்றுசொல்லித்தந்த உன் அன்னை
மற்றவர் உயிரில் விளையாடாதே என்று சொல்லித்தரவில்லையோ
இருகரம் கூப்பும் தெய்வத்தின் அடுத்தநிலை நீயென்றுஎண்ணிணோம்
அந்த எமனின் நேர் பிரதிநிதி ஆகிவிட்டாயோ
மனிதாபிமானத்தின் உச்சமமென்று என்னிவிட்டோம்
இப்படி பணத்திற்க்காய் எச்சமாவாய் என்றுதெரியாது
உனது கடமையை சேவையாக செய் இதுமுன்னோரின் சொல்
சேவையையே கடமையாக செய்து உடைத்துவிட்டாய் அச்சொல்லை
ஒன்றுமட்டும் தெரியவேண்டும் யார்பினமென்று