காத்திருப்பாயா

பள்ளம் என்றதும்
குதித்தோடும்
நீரே ஆனாலும்
மேட்டின்
உயரத்திற்கேற்ப
தன் இருப்பை
உயர்த்திக்கொண்டு
பாயுமல்லவா!
அதுபோல அன்பே!
உன் உயர் நிலைக்கு
நான் வர
கொஞ்ச காலம்
பொறுத்து இருப்பாயா?
கனிந்திடும் நாள் வரை
காத்திருப்பாயா?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (19-Jun-18, 10:01 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 115

மேலே