காதலில் தோல்வி
அவள் பார்வையால்
எனைக் கவர்ந்தாள்
தென்றலாய் அருகில்
வந்து நேசம் தந்தாள்
நேசம் வளர்ந்து
காதலானது -வல்விதி
என்னைத் தாக்கியது,
அன்று என் நாவில்
ஒரு தேவையில்லாப் பேச்சில் ,
அவள் புயலானாள் ........
நான் காதலியை இழந்தேன்
தனிமையில் வாட.........
'நாவடக்காமை காதலை மாய்த்து '