ஏற்றுக்கொள்வாயடா
வார்த்தைகளாய்
எழுதி எழுதி பின்
அழிக்கிறேன்!
என் காதல்
உணர்வுகளை! நம்
சாட்டிங்கின் போது!
உன்னைக் காண
உன் அருகாமையில்
நனைந்திட
ஆசைகளை சுமந்து
உன்னோடு
திரிகிறேன்!
தினமும்
உன்னைப்பற்றி
கிறுக்குவதே
என்
இரவு நேர
வேலையாக
இருக்கிறது!
என் காதலை
வெளிப்படுத்த நான்
எடுக்கும் முயற்சிகளை
தோல்வியுறச் செய்கிறாய்
புரிந்தா?
புரியாமலா?
உனக்கும் எனக்குமிடையே
இருக்கும் மெல்லிய
நூலொன்றை அறுத்திடு
பணமேதும் வேண்டாம்
உன் அன்பொன்றே போதும்
நாம் வாழ! உனக்காக
காத்திரூக்கும் என்னை
ஏற்றுக் கொள்வாயடா!