ஆணின் அன்பான எதிர்பார்ப்புகள்

அழகு முக்கியமில்லை,
அன்றாட வழ்கையை அழகாய் நடத்தினால் போதும்...
பணம் ஒரு பொருட்டல்ல,
பாசத்தை காட்டும் உறவே போதும்...
நடிக்க தேவையில்லை,
நவரசம் காட்டும் உன் நாணம் போதும்...
மன்னிப்பு கேட்க தேவையில்லை,
மனதில் மறவாமல் இருந்தால் போதும்...

குற்றம் சொல்ல தேவையில்லை,
குறுகுறு பார்வை போதும் புரிந்து கொள்ள...
மோதல்கள் தேவையில்லை,
முத்தத்தால் ஈடுகட்டி
பிரச்சனைகள் ஏதுமின்றி
பாசமுடன் நாம் வாழ
பேச்சுகள் இனிப்பாய் பேசி
ஆசையுடன் அன்பை காட்டுவோம்...!!!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:38 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 11687

மேலே