திண்டாட்டம்

அன்று படித்தாலே பட்டம்,
இன்று காசு கொடுத்தாலே பட்டம்,
அன்று பட்டம் இல்லாதோர்க்கும் வேலை இருந்தது,
இன்று பட்டம் இருந்தும் இல்லாத நிலை,
தெரிந்தது விவசாயம் அதுவும் இல்லை,
தெருவெல்லாம் ஐட்டி புரியவில்லை,
வேலை கேட்டால் கொடுப்பதில்லை,
செய்பவனுக்கோ நிம்மதி இல்லை ,
எங்கோ போகிறோம் ,
படிக்காத மேதைகளே ஆண்ட நாடு இது,
படித்தோர் இருந்தும் பயனற்று போனதென்ன ,
மீண்டும் அடிமைத்தனம்,
அன்று ஆங்கிலேயன் ஆட்டிவைத்தான்,
இன்று தமிழனே தமிழனை அடக்கி விட்டான்,
அடங்கியது தமிழன் அல்ல (தமிழ் மூச்சு)
உணராதோர் உணரட்டும்,
மூச்சை அடக்கி வாழத்தான் முடியுமா? வீழ்வது ஒன்றே;
வீழ்வது தமிழன் ஆகினும்,
வாழ்வது தமிழ் என்பதை உணரட்டும்...

உணர்வுகளோடு உங்கள்,
தமிழ் பிரதீப்.

எழுதியவர் : வெ. பிரதீப் (20-Jun-18, 5:29 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : THINDATTAM
பார்வை : 131

மேலே