கவிமேகம் - காளமேகம்

Betty Botter bought some butter;
"But," said she, "this butter's bitter!
If I put it in my batter
It will make my batter bitter.
But a bit of better butter
Will but make my batter better."
Then she bought a bit of butter
Better than the bitter butter,
Made her bitter batter better.
So ´twas better Betty Botter
bought a bit of better butter.

இதை ,உங்களை சொல்லச்சொல்லி திணறடிக்கும் Peter மக்களுக்கு, இதோ தமிழில் அதைவிட சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்த காளமேக புலவரின் பாடல்..

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !

சொல்லாட்சி :
காக்கை -- காகம் , காத்தல்
கூகை -- ஆந்தை
கோ -- அரசன்
கூ -- உலகம்
ஒக்க - போல
கைக்கைக்கு -- பகை எதிர்த்து

காக்கைக்கு இரவில் பார்வை கிடையாது அப்போது ஆந்தையுடன் சண்டையிட்டால் காக்கை தோற்கும் . அதே போல் ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது எனவே அது பகலில் காகையிடம் தோற்கும் .. இதுபோல் நாட்டை காக்கும் அரசன் , கொக்கு தன் இரைக்கு ஒற்றைக்காலில் நெடுநேரம் காத்திருப்பது போல் , தான் வலிமை மிக்கவனாய் இருப்பினும் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனின் கைக்கு எட்டாமல் போய்விடும்...

தமிழ், ஆங்கிலத்திற்கு சளைத்ததில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.. Tongue twisters சொல்லி விளையாடும் நம் வீடு பிள்ளைகளுக்கு காளமேக புலவரின் பாடல்களையும் சொல்லி கொடுப்போம்


மீனாட்சி

எழுதியவர் : (20-Jun-18, 6:26 pm)
பார்வை : 46

மேலே