தமிழின் , தமிழனின் பெருமையினை உலகம் உணர செய்வோமாக-----------------கவிதைகள் தொகுப்பு

" தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்த்திடு
சூழ் கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்"

என்று பாரதி தமிழ் தாயை வாழ்த்துகிறான். முதன் முதலில் தோன்றிய தமிழ் மொழியை இன்று யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்ல வேண்டும் . " நல்ல தோர் வீணை செய்து அதை புழுதியில் எரிந்து விட்டோம்".

தமிழ் என்னும் சொல்லிற்கு இனிமை என்று பொருள் . பிறமொழிகளில் இல்லாத 'ழ' கர உச்சரிப்பு நம் மொழிக்கே உரிய சிறப்பு .தமிழ் மொழி பெரும்பாலும் மனிதனுக்கு வாழ்வியல் நெறிகளை சுட்டவும், இயற்கையையும் பெண்ணையும் வருணிக்க மட்டுமே பயன்படும் கருவியாகவும் இருக்கின்றது. தொன்மை மொழியாகிய தமிழில், இன்று பரவலாக பேசபெரும் அறிவியல் கூறுகள் தமிழில் இல்லை என்பது மிகவும் சாடதக்கதாகும்.

இசை, மொழியினை மக்களிடம் பரப்புவதற்கு ஒரு கருவியாய் செயல்பட்டது.முத்தமிழில் நடுவனதாய் திகழும் இசைக்கு இனிமை சேர்ப்பது தமிழ்.

நாவுக்கரசர் இறைவனை பாடுகையில்,
"ஏழ் இசையாய் இசை பயனாய்" என்கிறார்.

நோய் தீர்க்கும் ராகங்களையும்,இயற்கையை இசைய வைக்கும் ராகங்களையும் மொழியில் அமைத்து பாடியவர்கள் தமிழர்கள்.

முற்காலத்தில் இருந்த யாழும், வீணையும் சொடிக்கி வாசிக்கபடுகின்ற கருவிகளாகும் . இக்கருவிகளில் "கமகம்" இடம் பெற முடியாது. வீணையை சொடுக்கி வாசிக்காமல் , விருடைகளின் மேல் விரல்களை வைத்து இழுத்து கொண்டே போவதால் கமகத்தை உண்டாக்க முடியும் . இந்த நுண்ணிய கருத்தை "
"மிக நல்ல வீணை தடவி"
என்ற சொற்களின் மூலம் கோளறு பதிகத்தில் கமகத்தை முதன் முதலில் அறிவித்த பெருமை ஞானசம்பந்தரை சாரும்.எனவே நாகரீக மோகத்தில் இருக்கும் இளளஞர்கள் நமது தமிழ் கீதங்களை செவிமடுக்க வேண்டும்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே பிணியும் தோன்றியிருக்க வேண்டும். இன்று பெரும்பாலும் "அலோபதி" எனப்படும் மருத்துவமுறை பரவலாக உள்ளது .நோய்க்கான முளிகைகளையும், முறைகளையும் சொன்னவர்கள் சித்தர்கள்.பிணிக்கான காரணம் முன்று : கபம், வாயு,பித்தம். இவைபோலவே பிணிக்கான மருந்துகள் முன்று: சுக்கு, மிளகு, திபில்லி என்ற முன்றையும் குறிக்கின்றனர்.தமிழ் மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாகும். இவையாவும் பாட்டி வைத்திய முறையில் இன்றும் கிராமங்களில் கடை பிடிக்கபடுகின்றது. மேலும் நோய்தீர்க்கும் முறைகளான யோகா, முச்சு பயிற்சி , த்யானம் என்பன யாவும் நம் நாட்டில் தோன்றியவையே.
பூமியை நாயகமாக கொண்டு சூரிய, சந்திர கோள்கள் சுற்றி வருவதாக கருதினான் (Aristotle).
" உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு " என்று நக்கீரர் பாடுகிறார். பிற்காலத்தில் (Coperniccus, galileo ) போன்றவர்களே சூரிய நாயக கொள்கையை நிறுவினர் (Sun - Centered Theory).

" கோள் மின் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு" (சிருபானாட்ட்று படை)


" நாள் , கோள், திங்கள் , ஞாயிறு , கனையழல் ஐந்தொரு புனைந்த விளக்கம்" (பதிற்றுபத்து) என பண்டை தமிழ் சங்க புலவர் குமடூர் கண்ணனார் குரிபிடுவதில் சிறு புள்ளியாக தோன்றும் விண்மீன் (Star) , சற்றே பொலிவுடன் திகழும் கிரகம் (Planet) , சந்திரன், சூரியன் ஆகியவற்றை தொடர்ந்து கனையழல் என்ற சொல்லாட்சி விண்மீன் தொகுதியான உடுமண்டலத்தை (Galaxy) குறிக்கும். இன்றும் தமிழர்களால் கண்டறிய பட்ட பஞ்சாங்கத்தை நாம் பயன்படுத்துகிறோம் .

"எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும்" (அவ்வை )

எண்களை மிகவும் போற்றியவர்கள் தமிழர்கள். பூஜியத்தை கண்டறிந்து சொன்னவர்கள் நம் நாட்டவர்.

" ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நால்நாழி" (மூதுரை) .

இவ்வரிகளை நோக்கினால் எவ்வளவு தான் அமுக்கி முகர்ந்தாலும் ஒருபாத்திரத்தின் கொள்ளளவிற்கு மேல் அது கொள்ளாது என்னும் அறிவியல் உண்மையை புலப்படுத்தும். எண்களை குறிக்க பெரிய கெட்டி லக்கம் , பெரிய நெல்லி லக்கம் , கீழ்வாய் இலக்கம் , பெருகுழி , சிறுகுழி என்பன பயன்படுத்தப்பட்டன.

" நீர் இன்றி அமையாது உலகம்" (குறள்)
நாட்டு செல்வங்களில் முக்கிய பங்கு நீருக்கு உண்டு .நீர் ஒரு பொருளாதார தகுதி உடைய பொருளாக உருவாகி விட்ட போதிலும் , இன்னும் அது ஏற்றுமதி இறக்குமதி பொருளாக வில்லை. ஒரே நாட்டில் கூட ஒரு நதியின் படுகையில்ருந்து உபரி நீர் இன்னொரு நதி படுகையின் தேவையை தீர்க்க திருப்பி விடபடுவதில்லை."படுகை விட்டு படுகை நீர் மாற்றம்" ( Inter- basin transfer) இன்னும் ஒரு பரவலான கொள்கையாக்க படவில்லை என்றாலும் நீர்வளம் ஒரு தேசிய சொத்தாக வேண்டும் என்பதை

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்"

என்று அன்றே சொன்னான் பாரதி.

மேலும் தொழில் குறித்து பாடுகையில்

"காசி நகர் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்றார்.

அண்மையில் கடல் தாயின் கொந்தளிப்பால் ஏற்பட்ட சுனாமி பேரழிவு நம்மால் மறக்க முடியாத ஒன்று. இதனை பற்றியும் தமிழ் வல்லுனர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். அமரர் கல்கி இன் பொன்னியின் செல்வன் என்னும் புதினத்தில் சுழல் கட்ட்ரிக்கான அறிகுறி , அவை எப்படி பேரலைகளாக எழும் என்பன போன்ற குறிப்புகள் உள்ளன. இவ்வாறு சுழி காற்று வீசும் பொது பாய் மரங்களை அவிழ்த்து விட வேண்டும் என்கிறார். மின்னலடிக்கும் பொழுதினை கூறுகையில்
"மின்னல் அடிவானத்தில் இருளை கிழித்து கொண்டு புறப்பட்டது.அதுமேலும் நீண்டு கப்பும் கிளையும் விட்டு படர்ந்தது."இதில் கப்பும் கிளையும் விட்டு படரும் மின்னலை நாம் (Leader stroke) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

இவ்வாறு எந்த துறையை தொட்டாலும் தமிழனின் பாதசுவடே உள்ளது. இப்படி இருக்க நாம் ஆங்கில வழியில் கல்வி படித்து கொண்டு இருக்கிறோம் . இது இயற்கைக்கு மாறாக நாம் நடத்தும் போராட்டம். எத்தனை தான் முகபூசுக்கள் பூசினாலும் முகம் இறைவன் படைத்த படைப்பிலே தான் அழகாக அமையும்.

"Rain Rain go away , come again another day"
என்ற ஆங்கில பாட்டு தெரிந்திருக்கிறது,ஆனால் அதே மழையை அது விழும் அழகோடு அமைத்து பாடிய பாரதியின் பாடலை தெரியவில்லை.

" திக்குகள் எட்டும் சிதறி - தக்க
தாம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட
பக்க மலைகள் உடைவெள்ளம் பாயுது - தாம் தரிகிட
தக்க ததிங்க்ட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை அடிக்குது காற்று - தக்க
தாம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட "

இந்த பாடலை இனியாவது பள்ளிகளில் கற்று தர வேண்டும்.

இளைஞர்கள் பிற மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்க்கலாம் . நல்லது செய்ய துன்பம் வரும் , துன்பங்களை தோல்வியுற செய்து நம் மொழியின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவோம்.

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் மொழி பெயர்க்க வேண்டும்
இறவாத புகழ் உடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்."

என்ற பாரதியின் கனவினை மெய்பிக்க வேண்டும்.

வாக்கினிலே ஒளி உண்டாகும்
"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும்
கவி பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழிந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்று பதவி உயர்வு கொள்வார்
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர்சிறப்பு கண்டார் "



.
மீனாட்சி

எழுதியவர் : (20-Jun-18, 6:03 pm)
பார்வை : 81

மேலே