தமிழனென்று சொல்லடா
தமிழை உடையோன் தமிழன் என்று சொல்லடா...
நாகரிகத்தின் முன்னோடி தமிழன்...
விருந்தோம்பலை போற்றி வளர்ப்பவன் தமிழன்...
மொழியறியா உலகத்தில் இலக்கணத்தோடு மொழி பேசி வாழ்ந்தவன் தமிழன்...
விஞ்ஞானம் வளராக் காலத்திலேயே கண்டுபிடிப்புகளை பதிவு செய்தவன் தமிழன்...
பெரும் பழமைவாய்ந்த மொழியை அடையாளமாகக் கொண்டவன் தமிழன்...
பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்தவன் தமிழன்...
கலாச்சாரப் திருவிழாக்களில் அறிவியலுக்கெட்டா உண்மைகளைப் பின்னி வைத்திருப்பவன் தமிழன்...
தாய்மையால் பிள்ளையை உத்தமனாக வளர்த்தெடுக்கும் தாய்மார்களை உடையவன் தமிழன்...
புறமுதுகுகிடாமல் போராடும் குணமுடையவன் தமிழன்...
உலகமே வியக்கும் தமிழின் பிள்ளை நீயாக இருப்பின் சந்தோசம் கொள்; நீ வெற்றியாளனாகவே பிறந்திருக்கிறாய்...