உலக யோகா தினம் 21 - 06 - 18

ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்றாக இணைந்து யோகா செய்கின்றனர்.
நல்லதைச் செய்தற்கு நாமும் இணைவோம்.
உலக யோகாதினம்
==================
பாரதம் பெற்ற பெருமையாம் யோகாவும்
நீரதைக் கற்று நிலைபெறவும்! உங்கள்
உளமும் உடலும் உயிரும் இணையக்
களத்தில் பயிலக் குதி