திருநங்கை
திருநங்கைகளும் மனிதர்களே...
ஒன்றுமில்லாதோர்க்கு அடைக்கலம் தரும் அம்மாக்கள் இவர்களில் உண்டு...
அக்கா என்ற எவரேனும் அழைக்க ஏங்கும் சகோதரிகள் இவர்களில் உண்டு...
பாசத்திற்கு எங்கும் தங்கைகளும் இவர்களில் இருக்கிறார்கள்...
பெண்ணென்று சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ள மூச்சுள்ளவரை முயற்சிக்கிறார்கள்...
வெறுப்பின் காரணமே சொல்லாமல் இவர்கள்மேல் வெறுப்பென்னும் அரிதாரம் பூசப்படுகிறது...
உண்மையான புறக்கணிப்பின் வலியை திருநங்கைகளால் மட்டுமே முழுமையாய் சொல்ல முடியும்...
பல்வேறு துறையில் சாதனைகள் புரிந்து போராடி தன்னை நிரூபிக்கிறார்கள்...
வழிகாட்ட யாருமின்றி இவர்கள் பிச்சையெடுப்பது மாபெரும் அவலம்...
பெற்றோர்கள் இவர்களைத் தள்ளாதிருப்பதே திருநங்கைகள் உயர மிகச்சிறந்த வழி...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
