கவிதை

கவிதை..............
எதுகை மோனை சண்டையிட
செந்தமிழ் தேன் சொட்ட
தமிழுக்கே உரிய சொல் வன்மையில்
வார்த்தைகளோடு விளையாடும்
எழுதுகோளின் முனைகள் வெந்தாள்களில்
பதித்த முத்தம் என்று நினைத்திருந்தேன்............


என் மதனி பெற்றெடுத்த மழலை
அவளை மடி ஏந்துகையில்
கண்ணசைத்து புன்னகைத்த
செவ்விதழ் கண்டபோதே
செயலிழந்து போனது
என் கவிதையின் இலக்கணம் யாவும்...........

எழுதியவர் : சோட்டு வேதா (23-Jun-18, 5:19 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : kavithai
பார்வை : 128

மேலே