இருளும் பகலோனும்
இருளைத் துரத்த வந்தானா
ஆதவன் இல்லை இருளை
பிடித்து உறவாட வந்தானா
அவன் வருகைக்கு காத்திராமல்
ஓடிவிட்டாளா அவள்-காரிகை இருள்
பாவம் நித்தம் நித்தம் கிழக்கில்
வந்து நிற்கிறான் அவளை
காண்பதற்குள் அவள் நழுவிவிடுகிறாள்
r