காற்றின் தாகம்

ஆழிமழை அகந்தையோடு கொட்ட,
குரூரம் தாங்காத குளிர்காற்றும்
மறையிடம் தேடியோட,
கானகத்தின் நடுவமைந்த
ஓர்வீட்டைக் கண்டு,

காரிருள் சூழ்ந்த திறந்த கதவுகளூடே புகுந்து
காற்று சிறைபிடிக்கிறது
அந்த வீட்டை,

வீட்டின் தனியறையில் சுடர்விட்டு எரிகிறது
ஓர் மெழுகுவர்த்தி,
எரியும் சுடர் வீடு
முழுதும் பரவி ஒளிவீச,

மஞ்சத்தின் ஒளியில்
மயங்கிய கபடக்காற்று,
ஆசையில் நகையில்
மஞ்சொளி மோகம் கொண்டு,
வீறுகொண்டு பதியோடு
சுடரை அணைக்க ஓட,

சடாரென்று கதவுகள் எரியும்
சுடரால் சாத்தப்பட,
சாளர இடுதிரையும்
சுடரணைக்க முற்பட்டாடித் தோற்கவே,

காற்று வலியின் மதியால்
கதவுத் துவாரத்தின் வழியுட்புக,
சுடர்விட்டு எரியும்
மெழுகின் பொன்மேனிப் பளபளக்கிறது,

அறியா காற்று பதியோடு
எரியும் சுடரையணைத்து விட,
பளபளத்த மெழுகின்
மேனியும் இருளில் மறையகிறது,

ஏமாந்த காற்று மட்டும்
மெழுகின் பொன்மேனி காணவேண்டி,
சாளரத்தின் வழியே
உட்புகுந்து உட்புகுந்து
தேடிக் கரைகிறது,
சுடரொளியில் மறைந்த
மெழுகை மீட்டணைக்க!

எழுதியவர் : தமிழினியன் (24-Jun-18, 2:47 pm)
Tanglish : kaatrin thaagam
பார்வை : 4557

மேலே