அழகிய தேவதையே
அழகிய தேவதையே
உன் புன்னகை சிந்தும் இதழ்களில் விழுந்தேனடி...
சிந்தும் புன்னகையை அள்ளிக்கொள்ளவா...?
ஒரு பார்வையில் உன் விழியில் வீழ்ந்தேனடி...
விழிகள் இரண்டையும் திருடிக்கொள்ளவா...?
வெட்கம் கொண்ட கன்னங்களால் கட்டி இழுத்தாயடி...
அழகிய கன்னங்களை கில்லிக்கொள்ளவா...?
அலை அலையாய் பறக்கும் கூந்தலால் புயலடிக்குதடி...
கூந்தலுக்குள் ஒளிந்து கொண்டு குளிர்காயவா...?
புருவங்கள் இரண்டும் புன்னகையில் அழைக்குதடி...
புருவங்களை கட்டி பின்னிக்கொள்ளவா...?
- த.சுரேஷ்.