உனக்குத் தெரியுமா

வாரந்தோறும் நானும்
வந்துவிடுகிறேன்!
நீயும் வந்துவிடுகிறாய்!என்
கோரிக்கைகளை
கேட்டுக்கொள்ளும் சிவன்
உன் கோரிக்கைகளை
என்னிடம் சொன்னதேயில்லை!

அந்த நிழற்குடைக்குத்தெரியும்
உன்னை சுமந்து செல்லும்
பஸ்ஸிற்குத் தெரியும்! நீ
தீண்டிச்செல்லும் அச்
செடிகளுக்குத் தெரியும்!அந்த
கருப்பு குடைக்குத் தெரியும்!ஏன்
நம் தெருவிற்கே தெரியும்
நானுன்னை காதலிப்பது!
உனக்குத் தெரியுமா?

உன் வீட்டைக் காண்பித்தாய்!
தெருமுக்கில் உள்ள
விநாயகர் கோவிலைக்
காண்பித்தாய்!விழுதுகள்
தொங்கும் ஆலமரத்தைக்
காண்பித்தாய்!உன்
எதிர் வீட்டில் குடியிருக்கும்
மாமனிவனைக் காண்பித்தாயா
உன் சக தோழிக்கு!

ஞாபக அலமாரியில்
எதை எதையோ
அடுக்கி வைத்திருப்பதாக
சொல்கிறாயே!என்
உயிரே!உணர்வே!
முதன்முறையாக நானுன்னை
படம்பிடித்த அந்த
காகித கேமராவை
வைத்திருக்கிறாயா!சொல்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (24-Jun-18, 11:35 pm)
Tanglish : kaakitha camera
பார்வை : 554

மேலே