சிருங்காரப் பாட்டு------------வாழ்க்கைத் தத்துவம் --------தொகுப்பு -----------இன்று படித்தது

`மூடிய ஆடை முற்றக் களைந்து முகம் தழுவி
சூடிய கொங்கை சுற்றிப் பிடித்துச் சுடர் பரப்பி
வாடிய ரோமக் கால்களை மெல்ல வருடிவிட்டு
நாடிய இன்பம் மாந்தருக் குண்டு
நமக்கில்லையே!

------------------

செப்பளவு கொங்கைச் சேயிழை
யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து
முத்தமிட்டுக்
கொப்புளத் தொட்டிக் குளத்தினில்
மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!

---------------------------
பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்தெனையே
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக்
கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளி,என்
போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா!
கச்சி யேகம்பனே!
--------------------------------------
சிற்றமும் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்.

`சிற்றம்பலத்திற்கும் சிவகாமி உண்டு’ என்றார்.

`சிவன் காமம், மண் படைக்கும்; இவன் காமம், என் படைக்கும்?’ `

ரத்த அணுச் செத்தவன்தான் தத்துவத்தில் விழுவான்!’

`தத்துவத்தை மறந்தவன் தான் ரத்தத்தால் எரிவான்!’ `

ஆண்மை இலான் தத்துவங்கள் அவனுக்கே பொருந்தும்’

`ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம்’

`நாளைக்கோர் பெண் கிடைத்தால் நான் கூடச் சம்சாரி’

`வேளைக்கொன்று கிடைத்தாலும் வெறுப்பவனே சந்நியாசி’

---------------
மீண்டும் மலர ஆவல்

.





.

எழுதியவர் : (27-Jun-18, 5:40 am)
பார்வை : 23

மேலே