இடையில்
![](https://eluthu.com/images/loading.gif)
பகுத்தறியும் மதிக்கும் அதை வெல்ல துடிக்கும் விதிக்கும் - இடையில் நான்
கனவுகளுக்கும் கடமைகளுக்கும் - இடையில் நான்
ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் - இடையில் நான்
பொய்யான வார்த்தைகளுக்கும்,
மெய்யான மௌனங்களுக்கும் - இடையில் நான்
வெற்றியின் போதையில் வீழ்ந்திடாமலும்,
தோல்வியின் துயரத்தில் தொலைந்து விடாமலும் - இடையில் நான்
இவை இரண்டையும் பெற முடியாமல்,
ஒன்றையாவது தக்கவைத்துக்கொள்ள துடிக்கும் இதயங்களில் ஒன்று நான்.........