சாதி எனும் கொடிய நோய்

கூட்ட நெரிசலில்
நண்பனை முந்திக்கொண்டு ஓடுவதில்
என் கால்களுக்கு
வலுவில்லை

கால் இடறி விழுந்தேன்
முதுகில் சுமந்த பொதி மூட்டைகளிலிருந்து
சில காகித அட்டைகள்
ரோட்டில் சிதறிப் பறந்தது

அருகில் பலர் இருந்தும்
தூரத்திலிருந்து ஒருவர்
என்னை நோக்கி வந்தார்

தூக்கிவிடுவார்
என்று நினைத்தேன் - ஆனால்
அப்படி நடக்கவில்லை

பறந்து கிடந்த காகித அட்டையில் - ஓர்
அட்டையினை எடுத்துப் பார்த்தார்

பார்த்த கணத்தினிலே - அவர்
தன் உயிரையும் விட்டார்

அதிர்ச்சியில் நின்றேன்
ஆச்சர்யத்தில் மூழ்கினேன்
காகித அட்டைக்காக அல்ல
அவருக்காக..!

ஆமாம்...
அவர்தான் பாரதி............!

முன்னேறிச் சென்றவன்
நின்று
என்னருகில் வந்தான்

காகித அட்டையின்
ஒன்றின் மேல்
அவனது கண்கள் பறந்தன

அவன் கைகள்
என் கன்னங்களைப் பதம் பார்த்தது

இரண்டு நாட்களாய்த் தேடிப்பாரத்த
சாதிச்சான்றிதழை
நீதான்
எடுத்து வைத்தாயா என்று...............

எழுதியவர் : கவியரசன்,மு. (27-Jun-18, 6:54 pm)
சேர்த்தது : முகவியரசன்
பார்வை : 455

மேலே