விட்டுவிலகிட உன்னை

உன்னோடு வாழ்ந்த நாட்களை,
உன்னால் கண்ட இன்பங்களை
நீ கொடுத்த இன்னல்களை
கல்வெட்டாய் னதில் செதுக்கிவிட
காகிதமென நீ
கசக்கியெறிந்தது
என் உயிரையும் உணர்ச்சிகளையுமே...

உன் உள்ளத்தில் எனக்கு
இடம்
இருந்ததேயில்லை என்று
என் அன்பின் மடமைக்கு
முன்பே
புரியாமல் போனதே...
பொழுதைக் கழிக்கவே இன்றி,
வேறெதற்குமே
பயன்படவில்லை
என் நேசம்!!!

தவனையில் வாட்டும் உன்னினைவுகளை
தாமதமின்றி காலம்
அழித்துவிடட்டும்!!!

-g.k.

எழுதியவர் : காவ்யா (27-Jun-18, 10:48 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 124

மேலே