ஓட்ஸ் கஞ்சி குடியடி பாப்பா

ஓட்ஸ் கஞ்சிகுடித்து ஒட்டகமாய் ஓடுகிறான்
ஓட்ஸ் கஞ்சி குடித்து பேட்ஸ் மேனாகி
பிச்சில் ஓடி ஓடி ஓடியில் ரன் குவிக்கிறான்
சில சமயம் ரன் அவுட்டும் ஆகிறான் !
ஓட்ஸ் குடிப்பவன் ஓய்ந்து கிடைப்பதில்லை
ஓட்ஸுடன் துவங்கு உன் காலைப்பொழுதை !
பாப்பாவுக்கு ....
ஓட்ஸ் கஞ்சி குடியடி பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாது பாப்பா
பேட்ஸ் உமன் ஆகி நீயும்
பிச்சில் பிச்சு உதறடி பாப்பா (ஓட்ஸ் ...)
நீட் தேர்வு நீ எழுதாதே பாப்பா
நீ அங்கு சென்று அவமானப் படாதே பாப்பா
ஓட் போடும் வயது வந்ததும் பாப்பா
நோட்டாவில் ஒட்டுப் போட்டுவிட்டு வா பாப்பா (ஓட்ஸ் ..)
நோட்புக்கில் கிறுக்காதே பாப்பா
நோட்டை சரியாக எண்ணப் படிப்பாப்பா
ஆட்டபாட்ட தொலைக்காட்சி பார்க்காதே பாப்பா
வேட்டு வைக்கும் அறிவுக்கது பாப்பா (ஓட்ஸ் ...)