ஒரு மரத்தின் இளமை
மரமே உன்னை நான்
விதையாய் விதைத்தபோது
நானும் சிறுவன் -நான் வளர்ந்தேன்
நீயும் செடியாய் வளர்ந்து
வானளாவும் மரமாகிவிட்டாய்
இப்போது நான் என் வயோதிகப்
பருவத்தில், உடல் தொய்ய
பற்களும் விழுந்து கிழவனாய்
யவ்வனம் குலைந்து நிற்கின்றேன்
என் வயது ஏறக்குறைய மரமே
உனக்கு, உன்னில் நான் காண்பதெல்லாம்,
உன் எழில் வண்ணமும் பசுமையும்
பூவும், காயுமாய் பூத்துக்குலுங்கும்
எழில் வடிவம் நீ- உன்னை மூப்பு
அண்டுவதில்லையே எவ்வாறோ
நீ அறிவாயோ என் மரமே ..........
அதற்கு மரம் சொன்னது,
'நண்பனே, நான் எப்போதும் போல்
எனக்கென்று ஒன்றும் வைத்திடாமல்
கொடுத்து கொண்டே இருக்கின்றேன்
இலையை,பூவாய்,காயை, கனியாய்
ஓடித்திடும் என் அங்கம்...கிளையாய்...
இதுதான் நான் அறிவேன் என்னைப்பற்றி..
இதுதானோ என் இளமையின் ரகசியம்
நான் அறியேனே..... என்றது
வெட்கி தலைகுனிந்து நான்......
மரமே நீ கொடையாளி, நான்
சுயநலவாதி ...........புரிந்தது இப்போது என்றேன்.