போனேன்
![](https://eluthu.com/images/loading.gif)
எப்பொழுதாவது சிந்தும் பொய் புன்னகையும்
பொய்த்து போக கண்ணீராய் மாறி போனேன்
கடல் தேடும் ஆறாய் வழிந்தோட நினைத்து
வழி மாறி வலியாய் தொலைந்து போனேன்
நம் உரையாடல் எல்லாம் தேடி படித்து
கண்ணீரில் உறைந்து போனேன்
உயிரற்ற பொருள்கள் எல்லாம் உன் நினைவுகளை
நிறைந்து போக நானோ நினைவிழந்து போனேன்
உன் நினைவுகளில் என்னை மறந்த நான்
உன்னை மறக்க மறந்து போனேன்
நினைக்கும் போதெல்லாம் கண்ணில நீராய் நீரையும்
உன்னில் நான் மூழ்கி போனேன்
கடலாய் உள்ள உன் நினைவுகளில் இருந்து வெளியேற
நினைத்து அலையாய் தோற்று போனேன்