காதல்
என் மனதில் வந்து
ஊஞ்சல் ஆடுகிறாய்
என்னை, என்ன குழலூதும்
அந்த கண்ணன்தான் என்று
எண்ணிவிட்டாயோ உனையே
மறந்து அவன் கீதத்திற்கு
கட்டுண்ட ராதையைபோல்
ஒய்யாரமாய் ஊஞ்சலாடுகிறாய்
இப்படி என்னவளே உன் பார்வையால்
என்னை என் கண்களைக்கட்டிவிட்டாய்
மயங்கியே நான் கண்களை மூட
என் மனதில் வந்து ஊஞ்சலாடுகிறாய்
ஒன்றும் தெரியா ராதைபோல் நீ
மூடிய என் கண்களுக்குள் ஊஞ்சலாடுகிறாய்
நானும் கண்ணனாக மாறிவிட்டேன்
ஊஞ்சலில் உன் பக்கம் வந்தேன்
குழலூதி மயக்கி உன்னோடு
சேர்ந்து மகிழ்ந்தேன் அதில் நீ ராதை
நான் உந்தன் கண்ணன்-கண்விழித்து பார்க்கையில்
எல்லாம் மாயம்
நீ , என்னவளே, ஒரே ஒரு உன்
பார்வையால் என்னுள் இத்தனை
கற்பனைகள் பாய்ந்திட செய்தாய்
மீண்டும் உன் பார்வை பட்டால்
அப்பப்பா ............நான் என்ன ஆவது
வருவது வரட்டும், உந்தன் அந்த பார்வைக்கு
நான் காத்திருப்பேனடி ராதே ,ராதே .