அவள் ஒரு கவிதை பயணம்

அவள் ஒரு கவிதை பயணம்

தாய்க்கு அடையாளம் தந்தாள்

தகப்பனின் கனவாக உதித்தாள்

கொஞ்சும் சிரிப்பால் கோலோச்சினாள்

மழலை மொழியால் மனம்கவர்ந்தாள்

தத்தி நடந்து முன்னேற்றம் கொண்டாள்

அழுகையிலும் அழகோவியமாய் மிளிர்ந்தாள்

எடுத்த முடிவை பிடிவாதத்தால் சாத்தியமாக்கினாள்

எதிலும் பின்வாங்க மறுத்து ஆதிக்கம் செலுத்தினாள்

படிப்பில் சுட்டி என பலர் புகழ உழைத்தாள்

உயர்வை எட்டிப்பிடிக்க ஓய்வுக்கு ஓய்வளித்தாள்

தோல்வி பல கண்டும் துவழாமல் ஓடினாள்

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க துணிவை நாடினாள்

அன்பின் பலத்தால் பல அதிசயங்கள் நிகழ்த்தினாள்

பிரிவின் வலியைக்கொண்டு மனதை உறுதியாக்கிக் கொண்டாள்

பெண்மைக்கு படமாக அவளே வாழ்ந்து காட்டினாள்...

எழுதியவர் : ஜான் (30-Jun-18, 1:45 am)
பார்வை : 134

மேலே